Monday, October 26, 2009

என்னை கவர்த்த இருவர்

உலகில் பல மனிதர்கள் தோன்றி பல வித்தியாசமான செயல்கள் செய்து இருகிறார்கள் எடுத்து கட்க " ஹிட்லர் ,பாக்தத்ட் சிங் ,மார்ட்டின் லூதர் கிங்,இயேசு ,மோசேஸ் ,காந்தி ,முஹம்மது நபி, அண்ணா, பெரியார் ,பாரதியார்,கருணாநிதி" என பல மனிதர் உண்டு. பல மனிதர்கள் தோன்றி மறைத்து இருத்தலும் , பல திருப்பங்கள் செய்துஇருதலும் ,என்னை கவத இருவரை பற்றி இங்கு பதிகிறேன்.

உலகில் மாற்றங்கள் வருவதற்கு பல காரன்கள் உண்டு ...அதில் முக்கியமான ஒன்று " விடுதலை "....இந்த குறிபிட்ட இருவர், மக்களை சிந்திக வைத்தும், வழி நடத்தியும் ,மக்களை முன்னேற்றி உள்ளனர்.இவர்கள் உலகத்தே சிந்திக்க வைத்து உள்ளார்கள்.

இந்த இருவரும் ,உலகில் ஒரு சமுகம் அடிமை பட்டு, ஒற்றுமை இன்றி , அறிவு இழந்து ,முட நம்பிகையில் திளைத்த பொழுது தோன்றி மக்களை மாற்றினார்கள்.

ஒருவர் முகம்மது நபி (ஸல்), மற்றவர் தந்தை பெரியார்.இந்த இருவரையும் எதிரும் புதிரும் என பலர் கூறுவது உண்டு...என்னை பொறுத்த வகைகள் இருவரும் போராடிய காரணம் ஒன்றே.... இவர்கள் மக்களை வழி நடத்தி, அடிமை தனத்தை அகரற்றியவகள்
கடவுள் உண்டு ....கடவுள் இல்லை ....இதுவே அவர்களின் வேதா மந்திரம்.

ஒரு சமுகம் முட நம்பிகையில் திளைத்து ,பெண்களை அடிமை படுத்தி, நர பலிகள் கொடுத்து, பல கடவுள்களை உண்டாகி அதை வைத்து வியாபாரம் செய்து, மக்களை அவர்களுக்குள் பல பிரிவுகளாக பிரிது அடிமைகள வைத்து இருத்த பொழுது இந்த இருவரும் தோன்றினர்கள்.
ஒருவர் கடவுள் உண்டு என்று சொன்னதன் முலம், தன் நினைத்ததை முடித்தார். மற்றவர் கடவுள் இல்லை என்று சொன்னதன் முலம், தன் நினைத்ததை முடித்தார்.இருவரும் சிலைகளை உடைத்து , கடவுள் ஒரு பொருளவோ ,ஒரு நபரவோ , ஒரு இடமாகவோ , ஒரு திசையாவோ இருக்க முடியாது என சொன்னவர்கள்...
"இந்த இருவரும் மக்களின் ஆறிவு வளர்ச்சிக்கு வித்தாக இருத்தவர்கள்"