Tuesday, September 16, 2008

கண்ணதாசன் கவிதை

கண்ணதாசன் கவிதை வரிகள் ஞாபகம் வருது....

“நான் கேட்ட தாய் தந்தை படைத்தானா? இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா?

நான் இந்துவாக பிறந்திருப்பதில் என் முயற்சி எதுவும் இல்லை. நான் இந்துவாக இருப்பது எனக்குப் பெருமையும் இல்லை, இழிவும் இல்லை. ஆனால் நிச்சயமாக நான் மனித நேயமுள்லவளாக இருக்கிறேன். எவ்வுயிருக்கும் தீங்கு எண்ணாமல், எவரையும் புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல் இருக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். இது என் கையில்தான் உள்ளது. அதில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்

தமிழ்

சாகும்போதும் தமிழுக்காய் சாக வேண்டும்என் சாம்பலிலும் தமிழ் மணக்க வேகவேண்டும்

Wednesday, September 3, 2008

திருக்குறள்

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"