மனிதன் முன்னேற சில வழிகள்.நண்பர்களின் அனுபவம் மாற்று அவர்களின் கருத்துக்களை அலசி அறியும் களம்
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Wednesday, August 26, 2009
கருப்பு மணி அனுப்பிய கவிதை
தாத்தாவின் மூக்குக் கண்ணாடிகை தவறி விழும்முன் சொன்னேன்'Sorry ' தாத்தா என்று …!தூங்கும் போது கழுத்து வரைபோர்த்தி விடும் கருணை -தூக்கத்திலும் சொல்வேன்'Thanks ' ம்மா என்று …!நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றேவாழ்த்து அட்டையில் எழுதினேன்'Happy Birthday da' என்று …!காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்'Good Morning Uncle' என்று …!கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்'Hai' என்று …!மாலையில் கடற்கரையில் என்னவள் -மணலில்அவள் விரல் பிடித்தே எழுதுவேன்'I Love You' என்று …!இரவில் …வீட்டிற்கு செல்லும் வழியில் -காலைகுத்தியது முள் …'அம்மா' என்று அலறினேன்குத்தியது முள்ளில்லை - என்னைகுத்திக் காட்டியது - என் தமிழ்
Subscribe to:
Comments (Atom)